இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Swami Vivekanandar

படம்
ஒளி மிக்கவனே எழுந்திரு,  எப்போதும் தூயவனே எழுந்திரு,  பிறப்பு இறப்பு அற்றவனே எழுந்திரு.  எல்லாம் வல்லவனே, எழுந்து உனது உண்மை இயல்பை வெளிப்படுத்து.  இந்த அற்ப நிலைகள் உனக்கு தகுந்தவை அல்ல என்று சொல்லுங்கள்.  சுவாமி விவேகானந்தர் 

Jai Sri Ramakrishna

படம்
  ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா  கடவுளின் திருநாமமும் கடவுளும் ஒன்றே ' என்ற நம்பிக்கை திடமாகும் அளவுக்கு உன் இதயத்தில் கடவுளின் சாந்நித்தியத்தினை நீ நன்றாக உணரமுடியும். சுவாமி விரஜானந்தர்

Jai Sri Ramakrishna

படம்
 ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா  ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா  ஒரு பக்தர்: அவதார புருஷர்கள் உடல் தரிப்பது எந்த ஆசை காரணமாக ?" ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்தவாறு): 'என் ஆசைகள் எல்லாம் மறையவில்லை என்பதை நான் காண்கிறேன். ஒரு சாதுவின் சால்வையைப் பார்த்து நானும் அவ்வாறு அணிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினேன். இன்னமும் அந்த ஆசை யிருக்கிறது . நானும் இன்னொரு முறை பிறக்க வேண்டுமோ என்னவோ?' பலராம் (சிரித்துக்கொண்டே): 'ஒரு சால்வைக்காகவா மறுபடி பிறக்கப் போகிறீர்கள்!' (எல்லோரும் சிரித்தனர்) ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்தவாறு ) : 'நல்ல ஆசை இருக்க வேண்டும். அதைச் சிந்தித்தபடியே உயிரை விடலாம். சாதுக்கள் நான்கு புண்ணியத் தலங்களுள் ஒன்றை பாக்கியாக வைப்பார்கள்; அனேகமாக புரி ஜகன்னாத க்ஷேத்திரத்தை பாக்கி வைப்பார்கள். ஜகன்னாதரை நினைத்தவாறே உயிரை விடலாம் அல்லவா!' பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின்  அமுதமொழிகள் பக்கம் :213,3

Jai Sri Ramakrishna Trust

 ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா  ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா  தவ கதாம்ருதம் தப்தஜீவனம்  கவிபிரீடிதம் கல்மஷாபஹம்|  ச்ரவணமங்கலம் ஸ்ரீமதாததம்  புவி க்ருணந்தி தே பூரிதா ஜனா: || உமது அமுத மொழிகள்  துன்பத்தைத் துடைப்பவை  ஞானிகள் போற்றுபவை  பாவங்களைப் போக்குபவை  கேட்பதற்கு இனியவை  செல்வத்தை அளிப்பவை  உமது அமுத மொழிகள்  பேசிடும் நல்லோர் புண்ணியம் செய்தோர். ஸ்ரீமத்பாகவதம்- கோபிகா கீதம்

Dhanasekaran Muthaiah jai Sri Ramakrishna Trust

படம்
Dhanasekaran Muthaiah  Jai Sri Ramakrishna Trust