Jai Sri Ramakrishna

 ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா 

ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா 


ஒரு பக்தர்: அவதார புருஷர்கள் உடல் தரிப்பது எந்த ஆசை காரணமாக ?"


ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்தவாறு): 'என் ஆசைகள் எல்லாம் மறையவில்லை என்பதை நான் காண்கிறேன். ஒரு சாதுவின் சால்வையைப் பார்த்து நானும் அவ்வாறு அணிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினேன். இன்னமும் அந்த ஆசை யிருக்கிறது . நானும் இன்னொரு முறை பிறக்க வேண்டுமோ என்னவோ?'


பலராம் (சிரித்துக்கொண்டே): 'ஒரு சால்வைக்காகவா மறுபடி பிறக்கப் போகிறீர்கள்!' (எல்லோரும் சிரித்தனர்)


ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்தவாறு ) : 'நல்ல ஆசை இருக்க வேண்டும். அதைச் சிந்தித்தபடியே உயிரை விடலாம். சாதுக்கள் நான்கு புண்ணியத் தலங்களுள் ஒன்றை பாக்கியாக வைப்பார்கள்; அனேகமாக புரி ஜகன்னாத க்ஷேத்திரத்தை பாக்கி வைப்பார்கள். ஜகன்னாதரை நினைத்தவாறே உயிரை விடலாம் அல்லவா!'


பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 

அமுதமொழிகள்

பக்கம் :213,3

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Jai Sri Ramakrishna